6 5
இலங்கைசெய்திகள்

கஞ்சன உள்ளிட்ட மூன்று இளம் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானம்!

Share

கஞ்சன உள்ளிட்ட மூன்று இளம் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சர் காஞ்சன விஜேசேகர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் ஹேசா விதானகே ஆகியோரும் எதிர்வரும் பெர்துத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

இந்த மூன்று அமைச்சர்களுக்கும் நெருக்கமான தரப்புக்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தொடர்ந்தும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மூவரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான தங்களது நிலைப்பாட்டை இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூவரும் கடந்த 2019ம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...