துப்பாக்கிச்சூடு 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

களுத்துறையில் இன்று இருவர் சுட்டுப் படுகொலை!

Share

தெற்கில் அண்மைய நாட்களாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இன்று களுத்துறை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

42 வயதுடைய நபரே இதன்போது பலியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைதுசெய்யப்படவில்லை.

பாணந்துறை – நிர்மலா மாவத்தையில் வைத்து ஒருவர் இன்று முற்பகல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்தும் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...