WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ஊழல், மோசடிகளை வெளிப்படுத்தும் ஊடக சந்திப்பு

Share

நாட்டின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பெரும் எண்ணிக்கையான கோப்புகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.

அது தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பி. இன்று வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க, அரசியல்பீட உறுப்பினர்கள், முன்னாள் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் வசந்த சமரசிங்க மற்றும் சட்டத்தரணிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜே.வி.பி. தலைவர் மற்றும் கட்சி உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்குகளில் ‘நாட்டை அழித்த திருடர்கள் மொத்தமாக அம்பலம்’ என்ற தலைப்பின் கீழ் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.

இதன்படி, நாட்டின் பொதுச்சொத்துக்களை பாரியளவில் கொள்ளையடித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பல மோசடிகள், ஊழல்கள் இன்று ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...