பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், ஜே.வி.பியும் பாரியதொரு போராட்டத்தை இன்று முன்னெடுக்கவுள்ளது.
இன்று 23 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு குறித்த போராட்டம் நுகேகொடையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்போராட்டத்தில் ஜே.வி.பி. சார்பு தொழிற்சங்கங்களும், மாணவர் அமைப்புகளும், மகளீர் அமைப்புகளும் பங்கேற்கவுள்ளன.
திருமலை எண்ணெய் குதங்கள் உட்பட தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், நாட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரசு பதவி விலக வேண்டும், இல்லையேல் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என அழுத்தம் பிரயோகித்துமே இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
#SriLankaNews