விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பியியே செயற்படுகின்றது – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டு மக்களை காக்கவே இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிப்பதற்கு முயற்சிக்கின்றோம். எனினும், இதற்கு எதிராக உர கம்பனிகளின் தேவைக்கேற்பவே ஜே.வி.பியால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அப்பாவி விவசாயிகள் வீதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
எதிரணியால் முன்னெடுக்கப்படும் இத்தகைய போராட்டத்துக்கு அரசாங்க பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஆதரவு வழங்குவது வேதனைக்குரிய விடயமாகும்.” – என்றார்.
#SriLanka
Leave a comment