நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! – சிங்கள ராவய
கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் மேற்படி தெரிவித்துள்ளார்
மேலும், இராஜாங்க அமைச்சர்ரொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளை துப்பாக்கிமுனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரும் குற்றச்செயல் ஆகும்.
குற்றம் செய்தவர் பதவி விலகினால் மட்டும் போதாது. அவர் மிகப்பெரும் குற்றம் புரிந்துள்ளார். குறித்த இராஜாங்க அமைச்சர் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
இது போன்ற செயற்பாடுகளில் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருமாயின் எதிர்காலத்தில் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டி ஏற்படும். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியே அரசு அழிய வேண்டி ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
Leave a comment