SriLanka2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜூன் 9 போராட்டம்! – 150 பேர் CIDயிடம் சிக்கினர்

Share

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேரை குற்றப் புலனாய்வு திணைக்களம் தலைமையிலான விசாரணை குழுக்கள் அடையாளம் கண்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டவர்களுள் ஜனாதிபதி செயலகத்தை உடைத்து சேதப்படுத்திய 55 சந்தேக நபர்களும் பிரதமர் அலுவலகத்தை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் 15 பேரும் உள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பவற்றுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அங்கிருந்த சொத்துக்களை திருடியமை தொடர்பில் 80 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தினங்களில் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும், சட்ட மாஅதிபருடன் கலந்தாலோசித்து பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் தொல்பொருள் சட்டம் போன்றவற்றின் கீழ் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைடுக்கப்படுமெனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...