“கோ ஹோம் கோட்டா” போராட்டத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பான இணையவழி காணொளி சந்திப்பு நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இலங்கை வாழ் மூவின ஊடக நண்பர்களும் இதில் பங்குபற்றினர்.
இதன்போது எதிர்வரும் 20ஆம் திகதி காலை 11 மணியளவில் லேக்கவுஸில் இருந்து ஊடகர்களின் ஆதரவுப் பேரணி ஆரம்பமாகி காலிமுகத்திடல் போராட்டக்களத்தை சென்றடைவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுயாதீனமாக அனைத்து ஊடகவியலாளர்களையும் இந்த ஆதரவுப் பேரணியில் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment