மன்னார் மாவட்ட மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப்பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார்.
80 வயதான இவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான இவர் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார் .
குரலற்ற மக்களின்மக்களுக்கான குரலாகவும் , காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்க்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment