dilan
இலங்கைஅரசியல்செய்திகள்

புலிகளுடன் இணைந்து போராடியவரே ஜோசப் ஸ்டாலின் – ஆளுங்கட்சி குற்றச்சாட்டு

Share

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவர் – என்று விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.

அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

” எமது இராணுவத்தினர் மக்களை கொன்றனர் எனக்குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச் சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின். அவர் புலிகளின் கட்சியை சேர்ந்தவர்.

அடுத்ததாக மஹிந்த ஜயசிங்க என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்வி கட்டமைப்பை குழப்புகின்றனர்.” – என்றும் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, பாடசாலைகளின் சாவிகளை ஒப்படைக்குமாறு அதிபர்களுக்கு, பொலிஸார் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். இதனை ஏற்கமுடியாது. வலயக்கல்வி பணிப்பாளர் தீர்மானமொன்ற எடுக்கும்வரை அதனை ஒப்படைக்கமாட்டோம் – என்று அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

#SriLanka

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...