மத்திய வங்கியின் ஆளுநராக தற்போதுள்ள பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்னும் சில தினங்களில் தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் அஜித் நிவாட் கப்ரால் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளார்.
இதையடுத்து வெற்றிடமாகும் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை மீண்டும் நியமிப்பது தொடர்பில் பெரமுன கட்சி அவதானம் செலுத்தி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு வாய்ப்பளித்து தனது நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை துறந்த ஜெயந்த கெட்டகொடவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்க வேண்டும் என மொட்டுக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.