WhatsApp Image 2024 07 03 at 18.25.03 1 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வரவேற்றுள்ள ஜப்பான்

Share

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வரவேற்றுள்ள ஜப்பான்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மற்றும் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள இலங்கை (Sri Lanka) மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஜப்பான் (Japan) வரவேற்றுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் (Ali Sabry) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இதனை தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை நேற்று (02) சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவு மற்றும் அவற்றை வலுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவுகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய நிதி உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அலி சப்ரியுடன் இடம்பெற்ற சந்திப்பு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மனித வளப் பரிமாற்றத்தை மேலும் ஊக்குவிக்கும் என தான் நம்புவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...