16
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஜப்பான் உதவியுடனான அபிவிருத்திகள் : இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

Share

இலங்கைக்கு ஜப்பான் உதவியுடனான அபிவிருத்திகள் : இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ( JICA) தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (Yamada Tetsuya) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை (Nandika Sanath Kumanayaka) சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜெயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (Colombo Bandaranaike International Airport) அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜெயிக்கா (JICA) நிறுவனத்தின் உதவியுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் 11 வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது குறித்து அண்மையில் ஜப்பான் தூதுவர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதோடு அந்த செயற்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்தும் இன்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் கட்சுஹிரோ சுஷூகி (Katsuhiro Suzuki) உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...