அடுத்த மாதம் இலங்கை வரும் ஜெய்சங்கர்!!

jai shankar33 1559293321

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மார்ச் 18 அல்லது 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் , தான் விடுத்த அழைப்பை ஏற்றே அவர் இங்கு வருகிறார் என குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கைக்கு உதவி, ஒத்துழைப்பு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்தியா முன்வந்து உதவுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் உச்சபட்ட நட்பு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

#SrilankaNEws

 

 

Exit mobile version