25 6930ccccd21a5
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இளைஞர் படுகொலை: கைதான 6 பேரின் விளக்கமறியல் டிசம்பர் 15 வரை நீடிப்பு!

Share

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை 24 மணி நேரம் காவல்துறை காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் அனுமதி கோரியிருந்தனர்.

காவல்துறையினரின் தடுப்புக் காவல் விசாரணையின் போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளைக் காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களைப் பின் தொடர்ந்து பயணித்த காரொன்றும் ஏழாலை பகுதியில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

தடுப்புக் காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (டிசம்பர் 3) முற்படுத்தப்பட்டனர். அப்போது, மேலதிக நீதிவான் உசைன் அவர்களை டிசம்பர் 15 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைத் தேடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...

images 6
இலங்கைசெய்திகள்

இன்று டிசம்பர் 4 வானிலை முன்னறிவிப்பு: மேல் மற்றும் சப்ரகமுவாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

இன்று டிசம்பர் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல...