university student union jaffna university
இலங்கைசெய்திகள்

மோதவிட்டு குளிர் காய வேண்டாம்! யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

Share

வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை சீனா நிறுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம்.

வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப் பண்ணைகள் செயற்படுவதாக எண்ணுகிறோம்.

குறித்த கடற்பகுதிகளில் சீனா நேரடியாக அட்டைப் பண்ணைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் பல்வேறு தரப்புக்களில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் சீனா மறைமுகமாக கொழும்பு நிறுவனங்கள் ஊடாக முதலீடு செய்துவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வளமான எமது குடாக்கடலின் பல ஏக்கர் பரவைக் கடல் பகுதிகளை முறையற்ற விதத்தில் அட்டைப் பண்ணைகள் அமைத்து வருவதாக அறிகிறோம்.

இயற்கையாகவே மீனினங்கள் இனப்பெருகத்திற்கேற்ற கண்ட மேடை பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட எமது குடாக்கடல் இயற்கையாகவே இறால் உற்பத்தி பெருகும் இடங்களாகவும் காணப்படுகிறது.

இப் பிரதேசங்களில் அட்டை ப்பண்ணைகளை அமைத்து கடல் நீரோட்டங்களை தடுத்து எமது கடலை நாசப்படுத்தும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

சீனாவின் இத்தகைய செயற்பாட்டினால் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மிக்க கடல் உணவைப் பெற முடியாத சமூகமாக எம்மை அழிப்பதற்கு சீனா முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அதன் ஆரம்ப புள்ளியாக பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சிப் பகுதியில் சீன முதலீட்டு பிண்ணனியில் பண முதலைகளினால் ஆரம்பிக்கப்பட்ட பண்ணையால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த பகுதிகளில் பணத்தை வாரி வழங்கி முறையற்ற அட் டை ப்பண்ணைகளை நிலை நிறுத்துவதற்காக போராட்டங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை இடம் பெற்று வருகிறது.

இவ்வாறான போராட்டக்காரர்களால் மீனவ சமூகம் இரண்டாகப் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் நிலையை சீனா உருவாக்கி தனது இருப்பை தக்க வைக்க முயல்கிறது

30 வருட யுத்தத்தின் பின்னர் முழுமையாக பொருளாதார ரீதியாக கட்டி எழுப்பப்படாத வடபகுதி மீண்டும் சீனாவின் அபிவிருத்தி என்ற யுத்தத்தினால் அழிவடையும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

மேலும் சீனா அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வருகை தந்து வழங்கப்பட இருந்த 4.3 மில்லியன் ரூபாவை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தோம்.

இந்நிலையில் கொழும்பில் இருக்கும் சீனாத் தூதரகம் தந்திரமான முறையில் பல்கலைக்கழ துணைவேந்தர் சற்குணராஜாவை கொழும்புக்கு அழைத்து நிதியை வழங்கியமை நாகரிகமற்ற செயற்பாடாக பார்க்கிறோம்.

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் பல்கலைக்கழக மாணவர்கள் என பல ஆயிரம் பேர் இன்றும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கு சீனா உதவி செய்யவில்லை.

சீனா தற்போது உதவி என்ற போர்வையில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள் ஊடுருவுவது ஏதோ ஒரு சதித் திட்டத்தை தனக்கு சாதகமாக நிகழ்த்துவதற்கு முன்னகர் வதாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகிய நாங்கள் பார்க்கிறோம்.

எமது கடல் எமக்குச் சொந்தமான நிலையில் அட்டைப் பண்ணை என்ற போர்வையில் மீனவ மக்களையும் எமது கடலையும் சீனா கையகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே தமிழ் மக்களை பொருளாதார நீதியில் அழிப்பதற்காக ஆயுதம் இல்லாத யுத்தத்தை சீனா மேற்கொள்ளுமாயின் மீனவ மக்களுடன் சேர்ந்து எமது கடல் வளத்தை பாதுகாக்க போராடத் தயங்க மாட்டோம் என கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...