யாழில் முழங்கிய பல்கலை மாணவர்கள்! – பேரணியாக மாறியது போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக மாறியது.

யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதவியை விட்டு வெளியேறக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பல்கலை முன்பாக ஆரம்பமான பேரணி பல மாணவர்களின் பங்கெடுப்போடு , பல்கலையில் இருந்து யாழ். நகர் நோக்கி பேரணியாக சென்றது.

பலாலி வீதியூடாக பருத்தித்துறை வீதியினை அடைந்து, அங்கிருந்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்த மாணவர்கள், பேருந்து நிலையம் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து, கஸ்தூரியார் வீதியூடாக , ஸ்ரான்லி வீதியை அடைந்து அங்கிருந்து ஆரியகுள சந்தியை அடைந்து, மீண்டும் பலாலி வீதியூடாக மாணவர்கள் பேரணி பல்கலையை அடைந்தது.

அதேவேளை, மாணவர்கள் பேரணியாக ஸ்ரான்லி வீதியூடாக செல்லும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் முன்பு சில நிமிடங்கள் தரித்து நின்று அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

20220404 121409

#SriLankaNews

Exit mobile version