யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு நிகழ்வின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தலைமையில்
கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழாவை, கொவிட் பரவல் காரணமாக நடாத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி மறுத்திருந்தார்.
பட்டக்கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களின் நன்மைக்காக, பட்டங்களை உறுதிப்படுத்தி, நிகழ்நிலையில் பட்டமளிப்பு விழாவை நடாத்த முடிவு செய்யப்பட்டதற்கு இணங்க, இன்று நிகழ்நிலையில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில், துறைசார் பீடாதிபதிகளால் பட்டங்களை நிறைவு செய்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன.
கொவிட் பரவல் நிலை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர், சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு வைபம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment