download 2 1 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் போதனாவில் ஊடகவியலாளர் சந்திப்பு!

Share

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் தனிகாசலம் மயூரன் அவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் வைத்திய நிபுணர்கள் நான்கு பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் வைத்தியசாலையின் சிறுவர் விடுதி மூடப்பட்டமை தொடர்பில் ஆங்கில பத்திரிகைகளில் செய்தி வெளி வந்திருந்தது.

இதே நிலைமை யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் காலங்களில் இடம் பெறலாம் என நாங்கள் அச்சப்படுகின்றோம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பது மருத்துவ மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உரிய ஒரு வைத்தியசாலை.

நோயாளர்களின் பிரச்சனைக்கு மேலதிகமாக , இந்த அரசாங்கத்தின் செயல்பாடு காரணமாக மருத்துவ மாணவர்களின் கல்விக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இது இலங்கை பூராக உள்ள வைத்தியசாலைகளில் இருந்து ,  வைத்தியர்கள் வைத்திய நிபுணர்கள் , மற்றும் அனைத்து தரப்பினர்களும் எமது நாட்டுக்கு அவசியமான கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறு நிலையில் ஏற் பட்டுள்ளது.

இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்பது அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது அந்த அடிப்படையில்  தற்பொழுது எமது கண்ணுக்கு முன்னால் அனுராதபுரம் வைத்திய சாலையின் சிறுவர் விடுதி மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல மாதங்களாக நாங்கள் கூறி வருகின்றோம் , எமது நாட்டில் இருந்து புத்திஜீவிகள் வெளியேறுகின்றனர்.

இது சம்பளப் பிரச்சினை மாத்திரமல்ல, எதிர்காலம் தொடர்பான அச்சத்தை தோற்றுவித்து வைத்துள்ளது.

இந்த நாட்டில் இருப்பதில் தொடர்கின்ற அச்சம்.  எமது அவதானிப்பில் பெரும்பாலான வைத்தியர்கள்  இந்த நாட்டில் தங்கி இருந்து சேவை செய்வதை விரும்புகின்றனர்.

இருந்தாலும் குறிப்பிட்ட பகுதியினர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...