IMG 20220509 WA0048
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். போதனாவில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தம்!!!

Share

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  ஸ்ரீ  பவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலை யினை பொறுத்தவரை நோயாளர்களின்  சிகிச்சைக்குரிய மருந்து மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களுக்கான மருந்துகளுக்கும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில்  அத்தியாவசியமாக தேவையான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது.

ஏனைய சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அத்துடன் விசர்நாய் கடிக்கான மருந்து தட்டுப்பாடாக இருக்கிறது எனவே பொதுமக்கள் கவனமாக மிருகங்களிடம்  கடிபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஏனெனில்  விசர் நாய்க்கடி மருந்து என்பது ஒரு விலை உயர்ந்த மருந்து தாகும் எனவே அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் விபத்துக்கள் மற்றும் தேவையற்ற பிரச்சனைகள் மூலம்வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் கோருகின்றோம்.

போதுமான அளவு சேவையினை வழங்க முடியாதுள்ளது என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுகாதார கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் தெரிவித்தார்.

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகள் வடக்கில் இல்லை, நாய்க்கடிக்குள்ளாகுவோருக்கு ஆபத்து

விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏஆர்வி மற்றும் ஏஆர்எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாய்களைக் கண்டால் விலகிச் செலலுங்கள். நாய்க்கடிக்கு உள்ளாகினால் விலங்கு விசர் நோய் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டினால் உயிர்களைக் காப்பாற்ற முடியாது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்க்கடிக்கு உள்ளாகியவர்களுக்கு ஏஆர்பி மற்றும் ஏஆர்எஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படாவிடின் நீர்வெறுப்பு நோய்க்கு உள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...