யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்தது.
இன்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment