University of Jaffnadd
இலங்கைசெய்திகள்

யாழ். பல்கலையில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களை பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழக பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (30), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் படி, மருத்துவ பீடாதிபதியும், சமுதாய மருத்துவ மற்றும் குடும்ப மருத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளருமான மருத்துவர் இ. சுரேந்திரகுமாரன் சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகவும், வணிக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பி. பிரதீப்காந் கணக்கியலில் பேராசிரியராகவும் , மனித வள முகாமைத்துவ துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜே.றொபின்சன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

image 6487327 IMG 1672 IMG 1673

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...