University of Jaffna 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலை இந்து கற்கைகள் பீடத்தின் திசைமுகப்படுத்தல் நிகழ்வு

Share

யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் நாளை 27 ஆம் திகதி காலை 8 மணி முதல் இடம்பெறவுள்ளது.

க. பொ. த உயர்தர 2019 ஆம் ஆண்டு கலைப் பிரிவில் தோற்றி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கலைப் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்வர்களில் சுமார் 50 மாணவர்கள் இந்து கற்கைகள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வியாண்டுக்காகப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வே நாளை 27 ஆம் திகதி, புதன்கிழமை காலை அறிமுக வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை நிறுவிய காலத்தில் இருந்தே இந்து கற்கைகளுக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் 2019 ஆம் ஆண்டே அதற்கான அங்கீகாரம் கிடைத்தது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக அப்போதைய நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்பமிட்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட 2115/5 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி மூலம் யாழ். பல்கலைக்கழகத்தின் 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் ஸ்தாபிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் செயற்படத் தொடங்கியது. அதன் முதலாவது பீடாதிபதியாக கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் கலைப்பீடத்திடன் இணைக்கப்பட்டிருந்த இந்து நாகரிகம், சைவ சித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் இந்து கற்கைகள் பீடத்தினுள் உள்வாங்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றாக இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்று நிறுவப்பட்டு, மாணவர்கள் கற்றுத் தேற வேண்டுமென்பது வள்ளலார் சேர். பொன். இராமநாதனின் கனவுகளில் ஒன்றாக இருந்ததெனவும், தற்போது முதலாவது மாணவர் உள்வாங்கலின் மூலம் அவரது கனவு மெய்ப்படுகிறதெனவும் மூத்த கல்வியியலாளர்களும், அறிஞர்களும் மகிழ்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...