யாழில்.டெங்கினால் ஒருவர் உயிரிழப்பு!

dengue fever 1

டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version