Nallai athinam army
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி நல்லை ஆதீனத்துடன் சந்திப்பு!

Share

யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதிக்கும், நல்லை ஆதீனத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவக் கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நல்லை ஆதினத்திற்கு வருகை தந்த யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியை நல்லை ஆதீன குருமுதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு, இராணுவ தளபதியினால் நல்லை ஆதீன குருமுதல்வருக்கு நினைவு பரிசும் கையளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நல்லை ஆதீன குரு முதல்வர்,

புதிதாக யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பதவி ஏற்றுள்ள என்னை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

அவர் புத்தாண்டுக்காக என்னை வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார்

தற்போதைய யாழ் மாவட் நிலை தொடர்பில் விளக்கமாக கேட்டறிந்து கொண்டதோடு, அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்துஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளேன். அத்துடன் எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தினை இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாக கொண்டாடு வதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்க மாறும் கிராமங்களில் ஆலய வழிபாட்டுக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படாதவாறு செயற்படவேண்டும்

குறிப்பாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தமது வழிபாடுகளையும் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும்

எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வினை பொது மக்கள் பட்டாசு கொழுத்தி சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் என்றும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...