யாழ். பல்கலையால் வில்வம் பழ உற்பத்தி உரிமம் கையளிப்பு

vilvam

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தால் உருவாக்கப்பட்ட வில்வம் பழ பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலத்தில் இடம்பெற்றுள்ளது.

வில்வம் பழ யோகட் பான கண்டுபிடிப்பாளர் உரிமத்தை பல்கலைக்கழக விவசாய பீடம் சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முல்லை பால்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் பார்பில் அதன் நிறுவுநர் சி.தவசீலனிடம் கையளிக்கப்பட்டு கைச்சாத்திட்டு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த யோகட் பானத்தை இயற்கையான வில்வம் பழ பாணியில் இருந்து முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனம் வர்த்தக ரீதியில் தயாரிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பானம் வயிற்றுப்புண் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகின்றதுடன் புற்றுநோய், கிருமித்தாக்கம், மூட்டுவலி போன்ற பல நோய்களுக்கு தீர்வை கொண்டுள்ளது என்றும் இந்த முயற்சி உள்ளூர் உற்பத்திகளையும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்க ஒரு முன்னெடுப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version