யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். சிறைச்சாலையில் 39 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 39 பேரிடம் பெறப்பட்ட பி.சி.ஆர். சோதனை மாதிரிகள் யாழ்.போதனா மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்றையதினம் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானோரில் 22 வயதுடைய இளம் பெண்ணும் அடங்குகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment