யாழ். கடற்பரப்பில் இந்திய படகுகள் அட்டகாசம்!

1677764445 indian 1 1

யாழ். சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன.

சுமார் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவை படகுகளால் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் திருவடி நிழலை கடற்பரப்பிலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLanka #India

Exit mobile version