யாழ். மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவு நாள் அனுஷ்டிப்பு

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

Tsunami devastation 02 1

தொடர்ந்து மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா, மதத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version