யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தின் முன்பாக தபாலக ஊழியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிரதான தபாலக நிர்வாக சிக்கலுக்கும் ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிரான கோஷங்களுடன் இந்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.
நிர்வாக அதிகாரிகளின் அராஜகத்தால் அஞ்சல் ஊழியர்களின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து ஊழியர்கள் நீதிவேண்டி அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment