யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்படஉள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எளிமையான முறையில் காணொளி முறையில் குறித்த நிகழ்வு இடம்பெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்றையமாநகர சபை அமர்வில் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம், அதனை யார் பராமரிப்பது என்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நீண்டகாலமாக திறந்துவைக்கப்படாதிருந்தது. இந்தநிலையில் தற்போது திறந்து வைக்கப்படவுள்ளது.
இதேவேளை இந்த நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் யாழிற்கான இந்திய துணைத்தூதர் ,யாழ் மாநகர முதல்வர்,மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இருப்பினும், திறப்பு விழாவிற்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை சம்பந்தப்பட்ட தரப்புகளால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews