முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் பராட்டப்பட்டதுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றதை முன்னிட்டே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ்.மாவட்ட செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றதை முன்னிட்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளீதரன், ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உற்பத்தித் திறன் பிரிவு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது உற்பத்தித்திறன் குழுவினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment