அளவுக்கு அதிகமான மதுபான போதல்களை எடுத்துச் சென்ற ஒருவர் (நேற்று) காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 50 மதுபான போதல்களை எடுத்துச் சென்றுள்ளார்.
பண்டத்தரிப்பு நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அளவெட்டி பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment