17 2
இலங்கைசெய்திகள்

யாழில் தவறான முடிவெடுத்து சிறுவன் உயிர்மாய்ப்பு

Share

யாழில் தவறான முடிவெடுத்து சிறுவன் உயிர்மாய்ப்பு

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

யாழ். பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய நிலையில் கடந்த 3 மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து கிராம சேவகர், அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வந்து, பாடசாலைக்கு வருமாறு கோரியும் பாடசாலைக்கு செல்லவில்லை எனவும், இதன் காரணமாக மாணவனின் கைப்பேசியினை தந்தை பறித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த மாணவன் 25.10.2024 அன்று வீட்டினை விட்டு வெளியேறி சென்றுள்ள நிலையில், இது குறித்து பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த மாணவன் பரந்தனில் உள்ள தமது வீட்டில் நின்றதாக கூறி உறவினர் ஒருவர் அவனை நேற்றிரவு (02) வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து நேற்று அதிகாலை 2 மணிவரை விளையாடிவிட்டு வீட்டிற்கு அருகேயுள்ள காணியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

இந்நிலையில் மாணவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...