2025 காலப்பகுதியிலும் ஜனாதிபதியின் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்கவே முடியாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.
யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் உரை சம்பந்தமாக பலர் பலவாறு விமர்சித்திருந்தார்கள். இதை எத்தனை நாளைக்கு கூறிக் கொண்டிருக்க போகின்றோம்.? எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
படையினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கத்தால் அவற்றுக்கான நீதியை வழங்கமுடியாது.
பொருளாதார ரீதியாக எத்தனை பேர் ஒத்துழைத்தாலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகின்றது. இதுவரை ஒத்துழைத்தவர்களால் எதை சாதிக்க முடிந்தது.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மூச்சும் விடவில்லை. மூச்சு விட்டிருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும். – என்றார்.
#SriLankaNews
Leave a comment