Subramaniyam
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எங்களுக்குப் பிச்சை போட்டதாகக் கூறுவது கேவலமானது!!

Share

தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எமது புலத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும், மாதகல் மேற்கு கிராமிய அபிவிருத்தி கடற்றொழில் அமைப்பின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

தினமும் எமது கடற்பரப்பில் வருடமொன்றிற்கு 144 தடவைகள் வந்து எமது வளங்களை அழிக்கிறார்கள். இது வருடக்கணக்கில் பார்க்கும்போது, எமது வளங்களை களவாடிச் செல்லும் தொகையானது 900 மில்லியனுக்கும் அதிகமானது.

எமது போராட்டத்திற்கு வழங்கிய சொற்ப பணத்தை முன்னிறுத்தி, எமக்கு உதவிகளை வழங்கியதாக கூறுவது மிகவும் கேவலமான விடயம். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உண்மைக்குப் புறம்பான போராட்டதை நடத்துபவர்கள் உண்மையான தமிழர்கள் அல்ல.

இந்தக் கடலை நம்பி எமது வாழ்வாதாரம் தங்கியுள்ளது. எமது வளங்களைச் சூறையாடிவிட்டு, அதில் நீங்களும் சம்பாதித்துவிட்டு, எங்களுக்குப் பிச்சை போட்டதாகக் கூறுவது மிகவும் கேவலமானது என்றும் அவர் மேலும் கூறினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...