என் கனவை நொருக்கியது புலிகளின் தலைவர் பிரபாகரன் தான்- ரணில் பகிரங்கம்

Ranil

ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாக ஈடுபட்டார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகள் நகர்த்தப்பட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவால் ஏன் இன்னமும் ஜனாதிபதியாக முடியவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் இரு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1994இல் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் முடிவு மாறியது.

அதனையடுத்து 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்குத் புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாகச் செயற்பட்டார் என்று கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், இனிவரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் நான் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version