” இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு,
” கொவிட் தொற்று நம்மால் உருவாக்கப்பட்டது அல்ல. நாங்களே அதனை செய்தோம் என்று மக்களைத் தூண்டிவிட சிலர் முயற்சிப்பதைப் பார்த்தேன். எதிர்கட்சியில் இருந்தாலும் நல்ல யதார்த்தமான யோசனைகளை முன்வைக்க தயாராக இருக்க வேண்டும்.
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. ஒவ்வொருவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் இது. எனவே, அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களை அடுத்த முறை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
புத்தாண்டு காலம் நெருங்குகிறது. உண்மையான பிரச்சனையை பார்த்துக்கொண்டே நாளை எரிபொருள் இருக்காது. உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொய்யான மாயைகளை உருவாக்குகிறார்கள். சில பிரச்சினைகள் சிலரின் நலனுக்காக மக்களுக்குத் தெரியாமல் உருவாக்கப்பட்டன. அதனால்தான் கூறினேன்.
நெருக்கடி இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஒரு அரசு என்ற வகையில், உங்களின் சிரமங்களை போக்கவும், உங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவை வழங்குவோம்.” – என்றார் பிரதமர்.
#SriLankaNews
Leave a comment