ஜனாதிபதியின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு “ஒத்துழைப்பு வழங்குவது பொதுமக்களின் கடமை மற்றும் பொறுப்பாகும் என ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று முற்பகல் மிரிசவெட்டிய விஹாராதிகாரி தேரரைச் சந்தித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனம் தெரியாத தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றி மக்கள் உயிர்வாழும் சுதந்திரத்தை இருமுறை வழங்கிய ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.
இந்நாடு பெரும் கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, தொற்றுநோய்க்கு அச்சப்படாமல் மக்கள் சுதந்திரமாக வாழ வாய்ப்பளித்திருப்பது, ஏனைய உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்க்கை முறையைக் கொண்டுசெல்வதற்கு ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் ஆத்ம சக்தியாக அமைந்துள்ளன.
நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்காமல் சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். பொருளாதாரத்தை நிர்வகித்துக்கொண்டு தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரதும் கடமையும் பொறுப்புமாகும். – என்றார்.
#SriLankaNews
Leave a comment