153224 strike
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்கள் பதவி விலகுவதே சிறந்தது! – ஹர்த்தாலுக்கு இ.த.ஆ.சங்கம் பூரண ஆதரவு

Share

நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் பதவிவிலக வேண்டுமென்பதே நாட்டில் உள்ள பெருபான்மையானோரின் கோரிக்கை.

இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்து, நாளையதினம் (28.04.2022) பணிப்பகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனை அனைவரும் ஏற்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், இதைவிட ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்வரும் 06.05.2020 (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பொதுக் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த இரண்டு நாட்களும் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது. அதிபர்கள் கல்வித் திணைக்களத்திற்கும், ஆசியர்கள் அதிபர்களுக்கும் தமது விடுமுறையை அறிவிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் – எனவும் தெரிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் போராட்ட வடிவம் மாற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...