2 16
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சிக்கல்: பின்னணியில் செயற்படும் உயரதிகாரிகள்

Share

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சிக்கல்: பின்னணியில் செயற்படும் உயரதிகாரிகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போதைய உண்மை நிலையை காட்டுவதற்கும், நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, திணைக்களத்தின் உயர் நிர்வாகம் வழங்கிய தவறான தகவல்களே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கியதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அனைத்து தரவுகளையும் தகவல்களையும் திணைக்களம் கொண்டிருந்தாலும், அது அரசாங்கத்தின் முழுப் பங்கில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய மிகவும் பொறுப்பான பாத்திரத்தில் ஈடுபட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு எவ்வளவு கடுமையாக இருந்தாலும் திணைக்கள அதிகாரிகளால் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தொடர்பாக உண்மையான நிலைமை வெளிப்படுத்தாமை வருத்தமளிக்கிறது என்றும் இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...