24 66651f1094ec5
இலங்கைசெய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: காணொளி தொடர்பில் தகவல்

Share

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: காணொளி தொடர்பில் தகவல்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என காட்டுவதற்காக போலியான காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த காணொளிக்காக நான்கு சந்தேகநபர்களும் சத்தியப்பிரமாணம் செய்யும் சூழ்ச்சி காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொதுவாக, ஐ.எஸ். பயங்கரவாதிகள் வலது கை கட்டை விரலை உயர்த்தி சத்தியப்பிரமாணம் செய்வார்கள் எனவும், இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான காணொளியில் இடது கையை உயர்த்தி தவறான காணொளி எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரின் தலைவன் என கூறப்படும் ஒருவர் இந்திய பிரஜை ஒருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுவந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தீவிரவாதச் சம்பவம் அல்ல எனவும், இது நாட்டின் நன்மதிப்பைக் கெடுக்கும் என்பதால் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...