6 17
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி எனது காதலி அல்ல..! நாமல் வெளிப்படை

Share

தான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரை தான் காதலித்தேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் பொலிஸார் கவனிக்க வேண்டும்.

ஒரு குழு திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக பொலிஸாருக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.

அப்படியானால் இந்த செயலாளர் யார்? இந்த தகவலை பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு கொடுத்தது யார்? இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.

வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, பொலிஸ்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், 323 கொள்கலன் தப்பியது போலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.

அரசாங்கத்தில் சிலர் “நீதிமன்ற உத்தரவுகளை ஏன் ஏற்க வேண்டும்?” என்று சொல்லும் நிலையை அடைந்துவிட்டனர். இதிலிருந்து அமைப்பு மாற்றம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் அவர் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...