இவ்வாண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன்களை அரசாங்கம் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
குறித்த பெரியதொகை பணத்தை அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
மேலும் கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களைத் தீர்ப்பதற்கே குறித்த கடன்தொகை பெறப்பட்டது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் தாமரை கோபுரம், துறைமுகங்கள், மைதானங்கள், விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் குடும்பத்தினர் பயணம் செய்வதற்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பெரும் தொகை கடனாகப் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
#SrilankaNews
Leave a comment