தடுப்பூசி அட்டை கட்டாயமா? – ஹெகலிய விளக்கம்
தற்போது நாட்டில் தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பொறிமுறை கட்டாயம் ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுளை அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம்.
இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சட்டரீதியான விடயங்கள் மற்றும் அத்தகைய நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான முழு அம்சங்களும் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி போடப்பட்ட பின்னரே தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
அதேவேளை 60 வயதுக்குக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.