இறக்குமதியான எரிபொருள் தரம் குறைவானதா?

Uthaya Kammanpila

தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் பதிலளிக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், தரம் குறைவான எரிபொருள் தொடர்பில் எந்தவொரு தரப்பில் இருந்தும் இன்னும் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்படி தகவல்களை வெளியிட்டார்.

#SrilankanNews

Exit mobile version