Three people arrested 25465
இலங்கைசெய்திகள்

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் காத்தான்குடியில் கைது

Share

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில்,  ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

2022 ஓக்டோபர் மாதத்தில் இந்தியா கோயம் புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே டிசெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்..

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்ரல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடையவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக  இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து  இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...