” நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் வரும் ‘நைட் வோட்ச்மேன்’ அல்லர். மாறாக வோட்டர்ஸ் அன்ட் கேட்டின் நைட்வோட்ச் மேன். இந்த நைட்வோட்ச் மேனால்தான் ஜனாதிபதி ஒருவருக்கும், உப ஜனாதிபதி ஒருவருக்கும் பதவி விலக வேண்டி ஏற்பட்டது. நீங்களும் அதனையா செய்ய போகின்றீர்கள்”?
இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் சபையில் நேற்று கேள்வி எழுப்பினார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நெருக்கடியான சூழ்நிலையில் கடினமான பணியை ஏற்றுள்ள நிதி அமைச்சர் அலி சப்ரிக்கு, பாராட்டுகள். தன்னை கிரிக்கெட் விளையாட்டில் வரும் ‘நைட் வோட்ச்மேன்’ என அவர் அடையாளப்படுத்தினார். நீங்கள் (அலிசப்ரி) கிரிக்கெட்டில் வரும் ‘நைட் வோட்ச்மேன்’ அல்லர். வோட்டர்ஸ் அன்ட் கேட்டின் ‘நைட் வோட்ச்மேன்’.
ஜனநாயகக் கட்சியின் தலைமையகம் உடைக்கப்பட்டமை தொடர்பில் ‘நைட் வோட்ச்மேன்’ தான் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதன்படி பொலிஸார் வந்து தாக்கி, ஐந்து பேரை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பில் இறுதியில் ஜனாதிபதிக்கும், உப ஜனாதிபதிக்கும் பதவி விலக நெரிட்டது. நீங்களும் அதனை செய்ய போகின்றீர்களா என தெரியவில்லை.
1950 யுகத்துக்கு செல்ல வேண்டாம். 1977 இற்கு பின்னரான நிலைமையை ஒப்பிட்டு நிதி தகவல்களை வெளியிடுங்கள். ” – என்றார்.
#SriLankaNews
Leave a comment