கோட்டாவுக்கு அழைப்பாணை!!

Gotabaya Rajapaksa

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, டிசெம்பர் 16 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

மரண தண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், பொதுமன்னிப்பு வழங்கியமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version