விசேஷ வீட்டில் திருட்டு – யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்.

திருட்டு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுண் தங்க நகைகளை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், விஷேசம் நடந்து மறுநாள், சொந்த வீட்டிற்கு செல்வதற்கான தயார்ப்படுத்தல் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு, குளியல் அறைக்கு சென்ற வேளையில், திருடர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் காலையில், அறையில் உள்ள அலுமாரிகளை திறந்து பார்த்த பொழுது தாலி உட்பட 28 பவுண் தங்க நகைகள் திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோப்ப நாய்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version